நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நடைபெற்றது.இந்த ஆட்டம் நட்டிங்கமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ச்சில் நடைபெற்றது.
இன்றைய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்( 38)மற்றும் ஜானி பைர்ஸ்ஸ்டோ( 38)குல்தீப் சுழலில் விக்கெட்டை பரிக்கொடுத்தனர்.பின்னர் இறங்கிய ரூட் மற்றும் கேப்டன் மோர்கனும் இந்திய அணியின் சுழலில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
பின்னர் இங்கிலாந்து அணி வீரர் பட்லர் அரைசதம் அடித்தார்.அடித்த வேகத்தில் 53 ரன்களில் வெளியேறினார்.பின்னர் ஸ்டோக்ஷும் அரை சதம் அடித்த நிலையில் 50 ரன்களில் வெளியேறினார்.மேலும் டேவிட் வில்லி 1 ரன்களில் வெளியேறினார்.பின்னர் அலி (24),ரஷித் (22) மற்றும் பிளாங்கெட் 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 6 விக்கெட்டுகள்,உமேஷ் 2 மற்றும் சாஹல் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.குல்தீப் 10 ஓவர்களில் 25 விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதனால் இந்திய அணிக்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா சதம் அடித்தார் .இது இவருக்கு 18-வது சதம் ஆகும்.இதேபோல் விராட் அரைசதமடித்தார்.பின்னர் அவர் 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து 40.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.களத்தில் ரோகித் 137 மற்றும் ராகுல் 9 ரன்களுடன் இருந்தனர்.குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில்,நடுத்தர ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.குறிப்பாக ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.இதன் விளைவாகவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நடுத்தர ஓவர்கள் அதிகம் வழங்கினேன்.குல்தீப் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.அதேபோல் ரோகித் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது..குறிப்பாக போட்டியை அவர் முடித்து கொடுத்தது சிறப்பாக இருந்தது.எங்கள் அணியின் ஆயுதமே மணிக்கட்டு பந்து வீச்சாளர்கள் தான் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…