இன்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். களத்தில் உமேஷ் 1 ரன்களுடன் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் குரான் 4 விக்கெட்டுகள்,அன்டர்சன்,ஸ்டோக்ஸ்,ரஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 180 ரன்கள் மட்டுமே அடித்ததது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் மற்றும் இஷாந்த் சர்மா 5 மற்றும் உமேஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிதைத்து விட்டனர். இந்திய அணி 54.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது.
முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.தவான் 13,விஜய் 6,ராகுல் 13,ரகானே 2,அஷ்வின் 13 ரன்களில் வெளியேறினர்.பின் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.மேலும் தினேஷ் 20, பாண்டியா 31 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முரளி விஜய்,ஷிகர் தவான்,விராட்கோலி (கேப்டன்),அஜிங்கியா ரகானே(துணைக்கேப்டன்),லோகேஷ் ராகுல்,ஹர்திக் பாண்ட்யா,உமேஷ் யாதவ்,இஷாந்த் சர்மா,ரவி அஸ்வின்,முகமது சமீ,தினேஷ் கார்த்திக்(கீப்பர்) ஆகியோர் இடம்பெற்றனர்.
முக்கிய வீரரான புஜாரவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரர் ஆவார்.பல தருனங்களில் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்த்தவர் ஆவார்.இவர் 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 97 இன்னிங்க்ஸ் விளையாடியுள்ளார்.அவர் 4531 ரன்கள் அடித்துள்ளார்.மேலும் மூன்று இரட்டை சதம்,14 சதம் மற்றும் 17 அரை சதமும் அடித்துள்ளார்.
மேலும் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 41 இன்னிங்க்ஸ் விளையாடியுள்ளார்.அவர் 1410 ரன்கள் அடித்துள்ளார்.மேலும் 4 சதம் மற்றும் 4 அரை சதமும் அடித்துள்ளார்.மேலும் பூஜார 791 ரேட்டிங்வுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சராசரி ஆகும்.வெளிநாட்டு மைதானங்களில் சராசரி ஆகும்.எனவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீரரை இந்திய அணி வெளியே வைத்துள்ளது.
குறிப்பாக இவரை இந்திய அணியின் அடுத்த சுவர் என்றே வர்ணிப்பார்கள்.இவரது ஆட்டமும் ராகுல் டிராவிட்டை போல் நிலையாக இருக்கும்.ஆனால் இன்றைய ஆட்டத்தில் இவரை அணியைவிட்டு வெளியே இருக்க வைத்திருப்பது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்றைய போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…