ENGLAND vs INDIA:இந்த நள்ளிரவிலும் குல்தீப் சுழலை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!குல்தீப்பை கணிக்க இங்கிலாந்து தவறிவிட்டது!
அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.பின்னர் இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் இன்று தொடங்கியது.
இன்று முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அமர்களமாக மாறியது,ஜெய்சன் ராய் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.பின்னர் இறங்கிய ஹய்லஸ் குல்தீப் சுழலில் சிக்கி ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில் தொடர்ச்சியாக வெளியேறினார்.இதன் மூலம் குல்தீப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அவர் 3 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் எடுத்து 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
Amazing spell by @imkuldeep18 England failing to read Kuldeep’s wrist position. #ENGvIND
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2018
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நள்ளிரவிலும் குல்தீப்பின் பந்துவீச்சை பாராட்டி உள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது,குல்தீப்பின் பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது.மேலும் இங்கிலாந்து அணி குல்தீப்பின் பந்துவீச்சில் அவரது மணிக்கட்டை சரியாக கணிக்கத் தவறி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.