ENGLAND VS INDIA:இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது!

Published by
Venu

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 வது T 20  கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.பேட் செய்த இங்கிலாந்து அணி  ஜெய்சன் ராய், மற்றும் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதலில் ஜோஸ் பட்லர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அணியின் ரன்கள் 103 எட்டிய நிலையில் ஜெய்சன் ராய் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஹேல்ஸ் 30 ரன்களில், மோர்கன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஸ்டோக்ஸ் 14 ரன்களில், ஜோனி  25 ரன்களிழும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக அட்டா நேர முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் களமிறங்கினர். இதில் இந்திய அணி 21 ரன்கள் எடுத்த நிலையில் தவான்  5 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ராகுல் 19 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இந்திய வீரர் ரோகித் சர்மா தனது அரை சதத்தை 28 பந்துகளில் அடித்தார்.இது இவருக்கு 16 வது சதமாகும்.பின்னர் விராட் கோலி 43 ரன்களில் ஆட்டம் இழந்தார்.இந்நிலையில் ரோகித் சர்மா 56 பந்துகளில் சதம்  அடித்தார்.இது இவருக்கு மூன்றாவது சதம் ஆகும்.

பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ரோகித் 100 மற்றும் பாண்டியா 33 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

23 minutes ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

1 hour ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

2 hours ago

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

2 hours ago

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

3 hours ago

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

4 hours ago