அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.பின்னர் இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் நேற்று தொடங்கியது.
நேற்று முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பமே அமர்களமாக மாறியது,ஜெய்சன் ராய் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.பின்னர் இறங்கிய ஹய்லஸ் குல்தீப் சுழலில் சிக்கி ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மோர்கன் 7,பைர்ஸ்டோவ் 0, ரூட் 0 ரன்களில் தொடர்ச்சியாக வெளியேறினார்.இதன் மூலம் குல்தீப் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்சியாக மொயீன் அலி 6,பட்லர் 69,ஜோர்டன் 0 ரன்களில் வெளியேறினர்.20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் எடுத்து 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய 160 என்ற வெற்றி இலக்கை 18.2 ஓவர்களில் எட்டியது.இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்துவரை ராகுல் அபாரமாக விளையாடி 101 ரன்கள் அடித்தார்.இது இவருக்கு இரண்டாவது சதம் ஆகும்.மேலும் ரோகித் 32, தவான் 4,விராட் கோலி 20 ரன்கள் அடித்தனர்.இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…