ENGLAND VS INDIA:இங்கிலாந்து அணியை மிரட்டிய இந்திய அணியின் அஷ்வின்,இஷாந்த்…!பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட் பறிகொடுத்த இங்கிலாந்து அணி

Published by
Venu

முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது .இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் நேற்று முன்தினம் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் அடித்தது.
இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்தது.89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். களத்தில் உமேஷ் 1 ரன்களுடன் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் குரான் 4 விக்கெட்டுகள்,அன்டர்சன்,ஸ்டோக்ஸ்,ரஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில்  நேற்று  இங்கிலாந்து அணி தனது 2-வது தொடங்கியது.3-வது நாளான இன்று மீண்டும்  ஆட்டம் தொடங்கியது.இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் நடையை கட்டினார்கள்.டேவிட் 20 ரன்கள் மற்றும் ஜானி 28 ஆகியோர் மட்டும் 20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது 86 ரன்கள் அடித்ததுள்ளது.இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

15 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

28 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

44 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

47 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

54 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

59 mins ago