ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.
பின்னர் நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் ,
ஜேசன் ராய் இருவரும் களமிறங்கினர்.தொடக்கத்திலே தடுமாறிய ஜேசன் ராய் நான்காவது ஓவரில் 9 ரன்னுடன் வெளியேற பிறகு இறங்கிய கேப்டன் ஜோ ரூட் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.
இதை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் 67 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 112 வருடத்திற்கு பிறகு குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.இதற்கு முன் 1907-ம் ஆண்டு சவுத்ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 76 ரன்கள் அடித்து இருந்தது.அதன் பின் நேற்றைய போட்டியில் தான் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…