16 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச டி 20 தொடருக்காக அடுத்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்துள்ளது.
கராச்சியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு போட்டிகளும் நடைபெறும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆகிய இரண்டும் இந்த சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தின.
இது இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாகவேஇந்த போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்தது. ஆனால் சிறந்த வீரர்கள் கிடைக்காததால் மற்றும் செலவுகள் தொடர்பான விஷயங்களால் இங்கிலாந்து அணி சுற்றுப்பயண நேரத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அடுத்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி இங்கிலாந்து அணி கராச்சிக்கு வரும், பின்னர், இரு அணிகளும் அக்டோபர் 16 ஆம் தேதி ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு புறப்படும்.
கடைசியாக இங்கிலாந்து அணி 2005 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயண செய்தது, அப்போது, மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. கடந்த பல ஆண்டுகளாகவே எந்த சர்வதேச அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லவில்லை. பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் ஹோம் கிரவுண்டாக இருந்துவருகிறது.
தற்போது சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு செல்ல தொடங்கியுள்ளன. இலங்கை அணியை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செல்கிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…