இந்தியாவுக்கு 166 இலக்கு… மளமளவென விழுந்த விக்கெட்.. இங்கிலாந்து அணி மீண்டும் திணறல்.!

சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 165 ரன்கள் குவித்துள்ளது.

india vs england

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து, இன்று இரண்டாவது டி20 போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. இந்திய தரப்பில், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதில், தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தர், சொந்த மண்ணில் அதிரடி காட்டியுள்ளார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 45 ரன்கள் விளாசினார்.

பட்லர் 30 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்து மொத்தம் 45 ரன்கள் எடுத்தார். பட்லரைத் தவிர, பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 166 ரன்கள் கணக்கில் இந்தியாவுக்கு இலக்காக வைத்துள்ளது. இப்பொது, 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா களமிறங்கி நிதனமாக விளையாடி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்