இந்தியாவுக்கு 166 இலக்கு… மளமளவென விழுந்த விக்கெட்.. இங்கிலாந்து அணி மீண்டும் திணறல்.!
சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 165 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து, இன்று இரண்டாவது டி20 போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. இந்திய தரப்பில், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதில், தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தர், சொந்த மண்ணில் அதிரடி காட்டியுள்ளார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 45 ரன்கள் விளாசினார்.
பட்லர் 30 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடித்து மொத்தம் 45 ரன்கள் எடுத்தார். பட்லரைத் தவிர, பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 166 ரன்கள் கணக்கில் இந்தியாவுக்கு இலக்காக வைத்துள்ளது. இப்பொது, 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா அணியில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா களமிறங்கி நிதனமாக விளையாடி வருகிறார்கள்.