6 விக்கெட்களை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி..!
இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 66 ரன்களுடன் தடுமாறி விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் அக்சர் படேல் 6 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள். பின் இறங்கிய இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் பின் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க ஜாக் கிராலி முதல் பந்திலே தனது விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 66 ரன்களுடன் தடுமாறி விளையாடி வருகிறது.
தற்போது களத்தில் பென் போக்ஸ் 1, ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன் எடுக்காமல் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் அக்சர் படேல் 4 , அஸ்வின் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.