INDvsENG : குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து ..! 5 விக்கெட் எடுத்து புதிய சாதனை ..!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து நிதானமாக ஸ்கொரை எடுக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வேக பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட்டை எடுக்காமல் சொதப்பினார்கள்.
Read M0re :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?
முதல் செஷனில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, 2-வது செஷனில் தடுமாறியது. பிறகு இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர்கள் கை கொடுக்காத நிலையில் சூழலை பந்து வீச்சை நோக்கி இந்திய அணி திரும்பியது. அப்போது பந்து வீச வந்த இடது கை சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார். அவரது சூழலில், இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை பெவிலியன் அனுப்பி வைத்தார்.
குல்தீப் யாதவ், நடந்து வரும் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு நான்காவது முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் சம்பவம் ஆகும். இதன் மூலம், தென் ஆப்ரிக்காவின் பால் ஆடம்ஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜானி வார்டில் இருவருக்கு அடுத்த படியாக சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் 4-வது முறை 5விக்கெட் வீழ்த்தும் போதே 50 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என சாதனையை படைத்துள்ளார்.
Read M0re :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!
100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அஸ்வினுக்கு ஆட்டத்தின் முதல் பாதியில் சூழல் கை கொடுக்காமல் போனது ஆனால் அதற்கு பிறகு அஸ்வினின் சூழலுக்கும் இங்கிலாந்து அணியால் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியது. அஸ்வினும் அவர் பங்குக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.