டாட்டா குட்பை…CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து…தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில் மோதியது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இருப்பினும் இன்று நடைபெறும் போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் நோக்கத்தோடு டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங்கை மட்டும் தான் அதிரடியாக தேர்வு செய்ததை தவிர எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், தொடர்ச்சியாகவே சிக்ஸர்கள் பவுண்டரிகள் விளாசுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், விக்கெட்களை இழந்தனர். கிட்டத்தட்ட இங்கிலாந்து இன்னிங்ஸ் 38.2 ஓவர்களில் முடிவுக்கு வந்துவிட்டது.இறுதியாக இங்கிலாந்து அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 200 ரன்கள் கூட தொடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இங்கிலாந்து அணி 179 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்ததாக 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் டார்கெட் குறைவு என்பதால் தென்னாபிரிக்கா அணி நிதானமாகவே விளையாடியாது. ரியான் ரிக்கல்டன் 27, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 இருவரும் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அடுத்ததாக களத்திற்கு வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் நன்கு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இருவருமே நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடினார்கள். பிறகு ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் ராஸ்ஸி வான் டெர் டுசென ஆட்டமிழக்காமல் * 72 களத்தில் நின்றார். இதன் காரணமாக இறுதியாக தென்னாபிரிக்கா அணி 29.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது.
ஏற்கனவே, இந்த தொடரில் 2 போட்டிகள் தோல்வி அடைந்து வெளியேறிய இங்கிலாந்து கடைசி போட்டியிலும் தோல்வி அடைந்த நிலையில், தொடரில் இருந்து நடையை கட்டியுள்ளது. மேலும், இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா அணியுடன் 3 டி20 3 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடியது. அதிலும் தோல்வி அடைந்து இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வெளியேறிய காரணத்தால் தன்னுடைய கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக ஜாஸ்பட்லர் அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.