முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்த இங்கிலாந்து.. 4 விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா..!

Published by
murugan

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடி விளையாடி வந்த டொமினிக் சிப்லே சதம் அடிக்காமல் 87 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 89.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்  82 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து அதிரடி காட்டி வந்த கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசி 218 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து 578 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, ,அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய இந்திய அணி தற்போது 4 விக்கெட்டை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி டொமினிக் பெஸ், ஆர்ச்சர்  தலா 2 விக்கெட்டை பறித்தனர். தொடக்க வீரர்கள் சுப்மான் கில் 29, ரோஹித் 6 ரன்களுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #INDvENG

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago