கடந்த ஆண்டு கொரோனா பரவியபோது, இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் தங்களது உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்களுக்கு நிதி திரட்ட 100 வயதை எட்டிய கேப்டன் டாம் மூர் முடிவு செய்தார். இதனால், தனது நூறாவது பிறந்தநாளுக்குள் (அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள்) 1,000 பவுண்ட் நிதி திரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது வீட்டு தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்கபோவதாக அறிவித்தார்.
1000 பவுண்ட் நிதி திரட்ட நடந்த கேப்டன் டாம் மூருக்கு 39 மில்லியன் பவுண்ட்(இந்திய மதிப்பில் 387 கோடி) நிதி திரண்டது. இந்நிலையில், கேன்சர் உட்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்தநிலையில் கேப்டன் டாம் மூர் கடந்த 02-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், கேப்டன் சர் டாம் மூரின் நினைவாக இன்று சென்னை டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கேப்டன் டாம், இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு மூத்த அதிகாரியாக இந்தியாவிலும், பர்மாவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…