#Cricket Breaking: பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா.. 52 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!

Default Image

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, 23.2 ஆம் ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது.

ind vs eng முதல் நாள்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. களத்தில் பண்ட் 33 ரன்களுடனும், அக்சார் 5 ரன்களுடன் இருந்தனர்.

இரண்டாம் நாள்:

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, சற்று சொதப்பியது. பண்டை தவிர மற்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை. அக்சர் 5 ரன்கள், இஷாந்த் மற்றும் குல்தீப் டக் அவுட், சிராஜ் 4 மட்டுமே எடுத்ததால் இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் மட்டுமே அடித்தது. களத்தில் பண்ட் 58 ரன்களுடன் இருந்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் மொயீன் அலி தலா 4 விக்கெட்டுகளையும், ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள். முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசிய நிலையில், 3 ஆம் பந்தில் ரோரி பர்ன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து 16 ரன்களில் டொமினிக் சிப்லி வெளியேறினார்.

ind vs eng

அதன்பின் களமிறங்கிய ஜோ ரூட், 6 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர், 9 ரன்களில் லாரன்ஸ் வெளியேற, அதனைதொடர்ந்து 18 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். 23.2 ஆம் ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த சூழ்நிலை, இந்திய அணிக்கு சாதகமானதாக உள்ளதால், இன்றைய நாள் முடிவிற்க்குள் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்களையும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கொர்:

தற்பொழுது இங்கிலாந்து அணி, 32 ஓவர்கள் முடிவில் 76 ரன்கள் அடித்தது. களத்தில் ஆல்லி போப் 17 ரன்களுடனும், பென் போக்ஸ் 9 ரன்களுடனும் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தளவில் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்