2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 45 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர்.
2-ஆம் நாள் ஆட்ட பாதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ராபின்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டுகளையும், மெயின் அலி ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டொமினிக் சிப்லி, சிராஜ் வீசிய பந்தை ராகுலிடம் கேட்சை கொடுத்து 11 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய ஹசீப் ஹமீது சிராஜிடம் போல்ட் ஆனார்.
பின்னர். கேப்டன் ஜோ ரூட் களமிறங்க ரோரி பர்ன்ஸ் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடிக்காமல் 49 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 45 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ஜானி பேர்ஸ்டோ 6, ஜோ ரூட் 48 ரன் எடுத்து உள்ளனர். இந்திய அணியில், சிராஜ் 2, ஷமி 1 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…