இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை முதல் நாள் பாதியில் தொடங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்திருந்தனர்.
அஷ்வினிடம் அதிக முறை விக்கெட் பறிகொடுத்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் முதலிடம் ..!
இதன் மூலம் இந்தியா 175 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 26)-ஆம் தேதி மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்தியா அடுத்தடுத்த விக்கெட்களை தொடர்ச்சியாக பறிகொடுத்தது. இறுதியாக 121 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்கிஸில் 436 ரன்களை எடுத்தனர்.
இதன் மூலம் இந்தியா 190 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து, இன்று தனது இரண்டாவது இன்னிங்க்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாக் கிராலி 31, பென் டக்கெட் 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு நம்பர் 3-ல் களமிறங்கிய ஒல்லி போப் நிதானமாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு ரன்களை குவித்தார்.
#INDvENG : சதத்தை தவறவிட்டது குறித்து கே.எல்.ராகுல்!
ஒரு பக்கம் விக்கெட்கள் விழுந்தாலும் மற்றோரு பக்கம் ஒல்லி போப் சதம் அடித்து இங்கிலாந்து அணிக்கு ரன்களை குவித்து வந்தார். இந்நிலையில், 3-ஆம் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. களத்தில் ஒல்லி போப் 148* ரன்களுடனும் , ரெஹான் அகமது 16 *ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதனால் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் தொடங்கப்படவுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்களையும், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…