#BREAKING: இங்கிலாந்து – இந்தியா முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது..!
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியதிலிருந்து மழையால் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
பின்னர், தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.5 ஓவரில் 303 ரன்கள் எடுத்தனர். இதனால், 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து இருந்தனர். கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் தொடர் மழை காரணமாக 5-ம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டு போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் இலக்காக இருந்தபோது நிலையில் மழை காரணமாக வெற்றி வாய்ப்பு நழுவியது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் நடைபெற்ற போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது.
UPDATE: Play has been abandoned. ☹️
The first #ENGvIND Test at Trent Bridge ends in a draw.
We will see you at Lord’s for the second Test, starting on August 12. #TeamIndia
Scorecard ???? https://t.co/TrX6JMzP9A pic.twitter.com/k9G7t1WiaB
— BCCI (@BCCI) August 8, 2021