#INDvENG: வெற்றி யாருக்கு..? 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது..!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தனர். அதில் அதிகபட்சமாக 209 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 55.5 ஓவரில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 143 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜாக் கிராலி 76 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!
பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 78. 3 ஒவர்களில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 104 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியில் ரிஹன் அகமது 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.
இதை தொடர்ந்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 14 ஒவர்களில் 1 விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. சாக் கிராலி 29* ரன்களுடனும், ரிஹன் அகமது 9* ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 332 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா..? அல்லது இங்கிலாந்து வெற்றி பெற்று 2-வது வெற்றியை பதிவு செய்யுமா..? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.