முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 89.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே இருவரும் இறங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய லாரண்ஸ் வந்த வேகத்தில் 5 பந்துகளைமட்டுமே சந்தித்து ரன் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின்னர் கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரும் அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஒருபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த , மறுபுறம் ஜோ ரூட்டிற்கு ஏற்றாற்போல நிதானமாக டொமினிக் சிப்லே விளையாடினார். சிறப்பாக விளையாடி விளையாடி வந்த டொமினிக் சிப்லே சதம் அடிக்காமல் 87 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 200 ரன்கள் குவித்தனர்.
இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 89.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 263 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 128* ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணியில் பும்ரா 2 விக்கெட்டையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் பறித்தனர்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…