#T20 World Cup: தொடர் வெற்றியில் இங்கிலாந்து ; தொடர் தோல்வியில் பங்களாதேஷ்..!
இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 2 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், பங்களாதேஷ் அணியும் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ், முகமது நயிம் ஆகியோர் மொயின் அலி ஓவரில் லிட்டன் தாஸ் 9, முகமது நயிம் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் வந்த ஷகிப் அல் ஹசன் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து ரிங்கிய முஷ்பிகுர் ரஹீம் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் அணி 124 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியில் மொயின் அலி, லிவிங்ஸ்டோன் தலா 2, மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 125 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பட்லர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் பட்லர் 18 ரன்கள் எடுத்து வெளியேற பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ஜேசன் ராய் அரை சதம் விளாசி 61 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து டேவிட் மாலன் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்தன. இறுதியாக இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 2 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் டேவிட் மாலன் 28* மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் 8* ரன் எடுத்து நின்றனர்.
இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. பங்களாதேஷ் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.