தொடர் தோல்வியில் இங்கிலாந்து.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி..!

Published by
murugan

இலங்கை அணி 25.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 25-ஆவது லீக் போட்டி இங்கிலாந்து , இலங்கை இடையில் இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் முதலில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் இருவரும்  தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணிக்கு ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில், டேவிட் மாலன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் சொற்ப ரன் எடுத்து வெளியேறினார்.

இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி சிறப்பாக விளையாட மறுபுறம் விளையாடி வந்த பேர்ஸ்டோவ் ராஜிதா வீசிய பந்தில் ஆட்டமிழந்து 30 ரன்னில் வெளியேறினார். பின்னர் களம் கண்ட ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டோன், மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். நிதானமாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 43 ரன் எடுத்து தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்த 156 ரன்கள் எடுத்தது.  இலங்கை அணியில் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் மற்றும் ராஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க , குசல் பெரேரா இருவரும் களமிறங்க வந்த வேகத்தில்  குசல் பெரேரா 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் நிலைத்து நிற்பார் என எதிர்பார்த்தபோது 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதீர சமரவிக்ரம , பாத்தும் நிஸ்ஸங்க உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இங்கிலாந்து அணி திணறியது. இதற்கிடையில் இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியில் இலங்கை அணி 25.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் சதீர சமரவிக்ரம 65* , பாத்தும் நிஸ்ஸங்க 77* ரன்கள் எடுத்து இருந்தனர்.

இலங்கை அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது.  இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டிகளில் வெற்றியும் , 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 9 -வது இடத்தில் உள்ளது.

Published by
murugan

Recent Posts

“இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.,” மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!

சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…

2 minutes ago

உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…

34 minutes ago

Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…

40 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…

3 hours ago

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

4 hours ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

12 hours ago