இந்திய அணியின் உடை அணிந்து மைதானத்தில் களமிறங்கிய இங்கிலாந்து ரசிகர்.
இந்தியா-இலங்கை இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 364 ரன்கள் எடுத்தன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்து உள்ளனர். இந்நிலையில், வழக்கமாக கிரிக்கெட் போட்டியின் போது ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான், அது போன்று இன்றைய இங்கிலாந்து -இந்தியா இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
இன்றைய போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர் ஒருவர் இந்திய அணியின் உடையணிந்து மைதானத்துக்குள் நுழைந்தார். இதைத்தொடர்ந்து, மைதான ஊழியர்கள் அந்த நபரை வெளியேற முயன்றபோது அவர் பிசிசிஐ லோகோவை காண்பித்து தான் இந்திய வீரர் என்று தெரிவித்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அந்த ரசிகர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த நபர் அணிந்து இருந்த உடையில் Jarvo என பெயர் எழுதி இருந்தது. இதை பார்த்த இந்திய அணி வீரர் முகமது சிராஜ் விழுந்து விழுந்து சிரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…