மீண்டும் மைதானத்தில் நுழைந்த இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ..!

Default Image

3 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்ததும் இந்திய அணியின் 4-வது வீரராக பேட்டிங் செய்ய இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மைதானத்தில் நுழைந்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த அவர் பீல்டிங் செய்வதுபோல உள்ளே வந்தார் பின்னர், அவர் பாதுகாப்பு ஊழியர்கள் மைதானத்தில் இருந்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில், லீட்ஸில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்ததும் இந்திய அணியின் 4-வது வீரராக பேட்டிங் செய்ய ரசிகர் ஜார்வோ களத்திற்கு வந்தார். பின்னர், அவர் இந்திய பேட்ஸ்மேன் இல்லை என தெரிந்ததும், ஜார்வோவை மைதான பாதுகாப்பு ஊழியர்கள் எச்சரித்து வெளியேற்றினர். தொடர்ந்து 2 போட்டிகளில் இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala