உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்திற்கு தகுதி உள்ளது -கேன் வில்லியம்சன்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை பறிகொடுத்து 241 ரன்கள் அடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடுத்தது.அதனால் போட்டி டையில் முடிந்தது.
பின்னர் இரு அணிகளுக்கும் சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனது. பின்னர் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.அப்போது பேசிய கேன் வில்லியம்சன், இறுதி போட்டி பெரும் சவாலாக இருந்தது.உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணி தகுதியானது.அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார்.
மேலும் கூறுகையில் இந்த மைதானத்தில் 300 ரன்கள் அடிக்கலாம் என எதிர்பார்த்தோம் ஆனால் அது நடக்கவில்லை இன்னும் 10-20 ரன்கள் அதிகமாக அடித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.கடைசிவரை எங்களது வீரர்கள் போராடினார்கள்.கடைசி கட்டத்தில் ஸ்டெம்பில் எறியப்பட்ட பந்து பென் ஸ்டோக் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது ஆட்டத்தின் போக்கை மாற்றியது என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)