இங்கிலாந்து முதலில் பந்து வீச தேர்வு- இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு.!
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 3 மணி அளவில் மழை பெய்ததால் டாஸ் தாமதம் ஆனது.
இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா, கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் காயம் காரணமாக ஷர்துல் தாக்கூர் விலகியதால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்க்கப்பட்ட நிலையில் இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஹசீப் ஹமீட், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, சாம் கரண் , ஒல்லி ராபின்சன், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி முதலில் இறங்கிய பேட்டிங் செய்து வருகிறது. 8 ஓவர் முடிவில் இந்திய அணி 8 ரன்கள் எடுத்துள்ளனர். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கியுள்ளனர்.