வெஸ்ட் இண்டீஸ் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த இங்கிலாந்து ..!

T20WC சூப்பர் 8: நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது.
20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது நேற்று இரவு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சூப்பர் 8 சுற்றில், 2-ஆம் பிரிவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியானது செயின்ட் லூசியாவில் டேரன் சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சற்று அதிரடியுடன் தொடங்கியது. விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.
இங்கிலாந்து அணியும் நன்றாகவே பந்து வீசியதால் ஓரளவுக்கு ஸ்கோர் உயராமல் பார்த்து கொண்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இலக்கை எட்டுவதற்கு களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்கத்தில் களமிறங்கிய ஃபில் சால்ட் வானவேடிக்கை காட்டினார்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஃபில் சால்ட் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 181 என்ற இலக்கை எட்டி வெற்றி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது இங்கிலாந்து. அதிரடியாக விளையாடிய ஃபில் சால்ட் 87* ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு உறுதுணையாக நின்று அணியை வெற்றி பெற செய்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025
பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!
February 25, 2025