#ENGvAUS : ஜோர்டன் – பட்லர் புயலில் சிக்கி சின்னாபின்னமாக ஆஸ்திரேலியா.! 12 ஓவருக்குள் வெற்றிவாகை சூடிய இங்கிலாந்து.!

Default Image

11.4 ஓவரிலேயே 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா ரசிகர்களில் ஆரவாரத்திற்கு நடுவே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில், இன்றைய போட்டியில், பலம்வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது.

அதில், இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்களின் பஞ்சுவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக பின்ச் மட்டுமே 44ரன்கள் எடுத்திருந்தார். வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் என நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்ததனர்.

அதன் பிறகு 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்க முதலே ஆதிக்கத்தை செலுத்தியது.

அதிலும், குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பட்லர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 71 ரன்கள் விளாசி அணி வெற்றி பெரும் வரை களத்தில் நின்றார். தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 22 ரன்களும், டேவிட் மாலன் 8 ரன்களும் எடுத்து வெளியேற, பெய்ர்ஸ்டோ 16 ரன்களுடன் அவுட் ஆகாமல், பட்லருக்கு துணையாக களத்தில் நின்றார்.

இறுதியில் 126 என்கிற எளிய இலக்கை 11.4 ஓவரிலேயே எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மாபெரும் வெற்றியை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிவு செய்துவிட்டது.

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சாளர்கள் ஜோர்டன் 3 விக்கெட்களும், மில்ஸ் மற்றும் க்ரிஷ் ஒக்ஸ் தலா 2 விக்கெட்களும், ராஷித் மற்றும் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்து அணி வெற்றிபெற பெரிதும் உதவினர்.

ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிஷ் ஜோர்டனுக்கு கொடுக்கப்பட்டது. புல்லிபட்டியலில் குரூப் 1 இல் 3 போட்டிகளில் விளையாடி 3-இலும் வெற்றி கண்டு முதலிடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. நெட் ரன்ரேட் +3.948

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்