அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!

இந்தியாவை சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நாங்கள் வீழ்த்துவோம் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.

rohit sharma and virat kohli

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, 4-1 என்ற கணக்கில் டி20 போட்டியை கைப்பற்றிய நிலையில், அதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஒரு நாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில்  கைப்பற்றிவிட்டது.

இருப்பினும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அந்த போட்டி இன்று (பிப்ரவரி 12) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து அணியின் வீரர் பென் டக்கெட் இந்தியாவுக்கு சவால் விடும் வகையில், தோல்விக்கு எல்லாம் சேர்த்து நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பதிலடி கொடுப்போம் என்கிற பாணியில் பேசியுள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்  பேசிய பென் டக்கெட் ” நாங்கள் இங்கு வந்திருப்பதற்கான முக்கியமான காரணமே சாம்பியன்ஸ் டிராபி  தொடரை வெல்லவேண்டும் கோப்பையை வெல்லவேண்டும் என்று தான். மற்றபடி இந்தியாவிடம் நாங்கள் தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. இந்தியாவிடம் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை.

ஆனால், இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்ள விரும்புவது என்னவென்றால், நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நாங்கள் அவர்களை (இந்தியாவை)  வீழ்த்துவோம். எனவே, எனக்கு இப்போது இந்தியாவிடம் தோற்றால் கூட அதனைப்பற்றி பெரிதாக கவலை இல்லை. இந்த பீட் கொஞ்சம் எங்களுக்கு ஏற்றபடி இல்லை என நான் நினைக்கிறேன். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனவே எங்களுடைய ஆட்டம் வேறு மாதிரியும் இருக்கலாம்.

இந்தியா எதிராக நாங்கள் சுமாராக விளையாடினாலும் கூட , இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நாங்கள் எப்போதும் நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்வோம். இங்கே பலன்கள் கிடைக்காதது கடினம், ஆனால் பாகிஸ்தானில் இதை மாற்ற முடியும் என்று நம்புகிறோம்” எனவும் பென் டக்கெட் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் vs நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்