#INDvsENG : அடடே 2 மாற்றங்களா ..? 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து ..!

இந்தியா, இங்கிலாந்து அணி இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையிலும் உள்ளது. இதை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது.

#WPL 2024 : நாங்களும் வருவோம் ..! நாளை தொடங்கும் பெண்கள் ஐபிஎல் ..!

 இந்திய அணியில் நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாட போகும் அணியை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது.

இந்த இங்கிலாந்து அணியில் சூழல் பந்து வீச்சாளரான ரெஹான் அகமதுக்கு பதிலாக இளம் சுழற் பந்து வீச்சாளர் சோயிப் பஷீரும், மார்க் வூட்டுக்கு பதிலாக வேக பந்து வீச்சளர் ஒல்லி ராபின்சனும் இடம் பெற்றுள்ளனர். இந்த மாற்றம் இங்கிலாந்து அணிக்கு கைகொடுக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் : 

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர் ), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்