நியூஸிலாந்தை கதறவிட்ட இங்கிலாந்து !அரையிறுதிக்கு முன்னேற்றம் !

Published by
murugan

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.

இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  எடுத்து 8 பவுண்டரி விளாசி வெளியேறினர்.பின்னர் ஜோ ரூட் களமிறங்கினர். நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 99 பந்தில்  15 பவுண்டரி , ஒரு சிக்ஸர் விளாசி 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.ஜோ ரூட் பொறுமையாக விளையாடிய  24 ரன்னில் வெளியேறினார்.

இறுதியாக 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தனர்.நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் , மாட் ஹென்றி , ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா இரு விக்கெட்டை பறித்தனர்.

இந்நிலையில் 306 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஹென்றி நிக்கோல்ஸ் சந்தித்த முதல் பந்திலே அவுட் ஆனார்.

பின்னர் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர்.தடுமாறி விளையாடிய மார்ட்டின் குப்டில் 8 ரன்னில் வெளியேறினார்.பிறகு ரோஸ் டெய்லர் இறங்க கேன் வில்லியம்சன் இருவரும் கூட்டணியில் சற்று அணியின் ரன்களை உயர்த்தினார்.

நிதானமாக விளையாடி வந்தனர் இருவரும்.அப்போது 15 -வது ஓவரை மார்க் வூட் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தை எதிர்கொண்ட ரோஸ் டெய்லர் பந்தை நேராக அடிக்க பந்து மார்க் வூட் விரலில் பட்டு எதிர்பக்கத்தில் இருந்த ஸ்டெம்பில் அடித்தது.

அப்போது கேன் வில்லியம்சன் ரீச்சை விட்டு சென்று இருந்ததால் கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.மத்தியில் களமிறங்கிய டாம் லாதம் நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.

பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 57 ரன்கள் அடித்தார்.இறுதியாக நியூஸிலாந்து அணி 45 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்கள் எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மேலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.இங்கிலாந்து அணியில் மார்க் வூட் 3 விக்கெட்டை பறித்தார்.

Published by
murugan

Recent Posts

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

28 minutes ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

58 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

1 hour ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

1 hour ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago