நியூஸிலாந்தை கதறவிட்ட இங்கிலாந்து !அரையிறுதிக்கு முன்னேற்றம் !
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள் எடுத்து 8 பவுண்டரி விளாசி வெளியேறினர்.பின்னர் ஜோ ரூட் களமிறங்கினர். நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 99 பந்தில் 15 பவுண்டரி , ஒரு சிக்ஸர் விளாசி 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.ஜோ ரூட் பொறுமையாக விளையாடிய 24 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில் 306 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஹென்றி நிக்கோல்ஸ் சந்தித்த முதல் பந்திலே அவுட் ஆனார்.
பின்னர் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர்.தடுமாறி விளையாடிய மார்ட்டின் குப்டில் 8 ரன்னில் வெளியேறினார்.பிறகு ரோஸ் டெய்லர் இறங்க கேன் வில்லியம்சன் இருவரும் கூட்டணியில் சற்று அணியின் ரன்களை உயர்த்தினார்.
நிதானமாக விளையாடி வந்தனர் இருவரும்.அப்போது 15 -வது ஓவரை மார்க் வூட் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தை எதிர்கொண்ட ரோஸ் டெய்லர் பந்தை நேராக அடிக்க பந்து மார்க் வூட் விரலில் பட்டு எதிர்பக்கத்தில் இருந்த ஸ்டெம்பில் அடித்தது.
அப்போது கேன் வில்லியம்சன் ரீச்சை விட்டு சென்று இருந்ததால் கேன் வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.மத்தியில் களமிறங்கிய டாம் லாதம் நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.
பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 57 ரன்கள் அடித்தார்.இறுதியாக நியூஸிலாந்து அணி 45 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்கள் எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
மேலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.இங்கிலாந்து அணியில் மார்க் வூட் 3 விக்கெட்டை பறித்தார்.