ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டி தான் ஜாஸ்பட்லர் இங்கிலாந்து கேப்டனாக விளையாடும் கடைசி போட்டி என்பதால் அவருடைய ஆட்டம் மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

England vs South Africa

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும் கூட தகுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

அதே சமயம் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியிலாவது வெற்றிபெற்று பலத்தை காட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு இங்கிலாந்து அணியும் களமிறங்கியுள்ளது. அதற்கு ஒரு உதாரணம் தான் டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. எப்படி இருந்தாலும் இந்த போட்டியில் வெற்றிபெற்றாலும் தகுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாது எனவே, எந்த அழுத்தமும் இல்லாமல் முழுக்க முழுக்க அதிரடியாக விளையாட பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.

இங்கிலாந்து: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித்(wk), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(c), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத்

தென்னாப்பிரிக்கா: டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(c), ஹென்ரிச் கிளாசென்(wk), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

மேலும், இங்கிலாந்து அணி இந்த தொடரில் விளையாடியதற்கு முன்பு இந்தியா அணியுடன் 3 டி20 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. அந்த தொடரிலும் இங்கிலாந்து தோல்வியை தழுவியிருந்தது. இதனால் பட்லர் கேப்டன்சி கடுமையாக விமர்சிக்கவும் பட்டது. அதனை தொடர்ந்து இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய காரணத்தால் வேதனையில் இருந்த பட்லர் இந்த தொடருக்கு பிறகு தான் கேப்டனாக செயல்படமாட்டேன் விலகுகிறேன் என அறிவித்து இருந்தார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகிய நிலையில் இனிமேல் வீரராக மட்டுமே விளையாடுவார். கேப்டனாக இது அவருக்கு கடைசி போட்டி என்பதால் அவரும் அதிரடியாக விளையாடி போட்டியில் வெற்றிபெற முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்