இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில், 27 ரன்கள் முன்னிலை உள்ள நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்று களமிறங்கும் இந்தியா.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கடந்த 4 முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 12ம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. இதில், அதிகபட்சமாக கேஎல். ராகுல் 129, ரோகித் சர்மா 83 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் 49, சிப்லி (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஹமீது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதன்பின் களமிறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
2வது நாள் ஆட்டநேர முடிவில் 45 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில், நேற்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில், பேர்ஸ்டோ அரை சதம் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீர்ரகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 3வது நாளில் 128 ஓவர்களில் இங்கிலாந்து 10 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 180 ரன்கள் அடித்து ஆட்டமில்லாமல் உள்ளார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4, இஷாந்த் சர்மா 3, முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில், 27 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, இந்திய அணி 2வது டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் இன்று களமிறங்க உள்ளது என்பது குரிடப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…