இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?

Published by
அகில் R

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை வெற்றி பெற்றிருந்தது. தற்போது, இன்றைய நாளின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இரவு 7.30  மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் நான்கு அணிக்கான பிளே ஆஃப் சுற்று நடைபெற்று கொண்டு வருகிறது. இச்சுற்றின் முதல் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில், இன்று எலிமினேட்டர் போட்டியானது நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி வெறும் அணி குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போட்டியில் தோல்வி அடையும்  அந்த அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர் :

இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் ஒருமுறை மோதி உள்ளனர். அந்த ஒரு முறையும் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாகவெற்றி பெற்றது. 

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக, நேருக்கு நேராக தலா 35 முறை மோதி உள்ளது. அதில் 15 பெங்களூரு அணியும், 13 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் முடிவில்லாமல் கைவிடப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்:

ராஜஸ்தான் அணி

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், தனுஷ் கோட்டியான்,

பெங்களூரு அணி

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், முகமது சிராஜ், தினேஷ் கார்த்திக், கேமரூன் கிரீன், ரஜத் படிதார், ரீஸ் டாப்லி, கர்ரன் சர்மா, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், லாக்கி பெர்குசன்.

Published by
அகில் R

Recent Posts

அதிகாலையில் அதிர்ச்சி : மியான்மரில் நிலநடுக்கம்! 4.8 ரிக்டர்.., 106 கிமீ ஆழம்…

நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…

20 minutes ago

ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் இந்திய குறும்படம்! ‘எமிலியா பெரெஸ்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!

அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…

10 hours ago

“பொறுப்புக்கு பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் தூக்கிருவோம்”… இது தளபதி உத்தரவு – பொதுச்செயலாளர் ஆனந்த்.!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…

11 hours ago

டங்ஸ்டன் திட்டம் ரத்து: ‘தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி’… அரசியல் தலைவர்கள் வரவேற்பு.!

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…

11 hours ago

“மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…

13 hours ago

டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு! “பிரதமர் மோடிக்கு நன்றி” – அண்ணாமலை

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

13 hours ago