இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?
சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை வெற்றி பெற்றிருந்தது. தற்போது, இன்றைய நாளின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் நான்கு அணிக்கான பிளே ஆஃப் சுற்று நடைபெற்று கொண்டு வருகிறது. இச்சுற்றின் முதல் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில், இன்று எலிமினேட்டர் போட்டியானது நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி வெறும் அணி குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போட்டியில் தோல்வி அடையும் அந்த அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர் :
இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் ஒருமுறை மோதி உள்ளனர். அந்த ஒரு முறையும் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாகவெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக, நேருக்கு நேராக தலா 35 முறை மோதி உள்ளது. அதில் 15 பெங்களூரு அணியும், 13 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் முடிவில்லாமல் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்:
ராஜஸ்தான் அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், தனுஷ் கோட்டியான்,
பெங்களூரு அணி
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், முகமது சிராஜ், தினேஷ் கார்த்திக், கேமரூன் கிரீன், ரஜத் படிதார், ரீஸ் டாப்லி, கர்ரன் சர்மா, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், லாக்கி பெர்குசன்.