சேப்பாக்கத்தில் இன்று எல்-கிளாசிகோ… சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை.!

Published by
Muthu Kumar

சேப்பாக்கத்தில் இன்று சென்னை-மும்பை அணிகள் மோதும் எல்-கிளாசிகோ போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிரிபார்த்து காத்திருக்கும், எல்-கிளாசிகோ எனும் மிகவும் பரபரப்பான போட்டியாகக் கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே இவ்விரு அணிகளும் ஒருமுறை மோதியுள்ளன, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை அதன் கோட்டையில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இவ்விரு அணிகளும் மோதவிருக்கின்றன.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கின்றன. சென்னை அணி தான் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் 2 தோல்வியும் ஒரு போட்டியில் முடிவில்லாமலும் முடிந்துள்ளது.

இதனால் சென்னை அணி இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே பிளேஆஃப் க்கு முன்னேற முடியும், அதே நேரத்தில் மும்பை அணி தான் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் 1 தோல்வியும், 2 வெற்றியும் பெற்று வலுவான அணியாக களமிறங்குகிறது. இதனால் இரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றே கூறலாம்.

சென்னை (உத்தேச அணி): டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, எம்எஸ் தோனி (C&WK), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர்/மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே

மும்பை (உத்தேச அணி): ரோஹித் ஷர்மா (C), இஷான் கிஷன் (WK), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்

Published by
Muthu Kumar

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

5 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

7 hours ago