ஜூன் 1 முதல் அமல்! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிகளை அறிவித்தது ஐசிசி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் 3 புதிய விதிகளை அறிவித்தது ஐசிசி.
அதில், இனி மென்மையான சிக்னல் (soft signal) நீக்கப்பட்டது, முடிவுகளைக் குறிப்பிடும்போது நடுவர்கள் இனி மென்மையான சிக்னல் கொடுக்க வேண்டியதில்லை. அதாவது, டிவி நடுவரிடம் முடிவுகளைக் குறிப்பிடும்போது, களத்தில் இருக்கும் நடுவர்கள் இனி மென்மையான சிக்னல் கொடுக்க வேண்டியதில்லை. ஆன்-பீல்ட் நடுவர்கள் எந்த முடிவும் எடுப்பதற்கு முன், டிவி நடுவருடன் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது , விக்கெட் கீப்பர்கள் மற்றும் ஸ்டம்புகளுக்கு முன்னால் நின்று பேட்டிங் செய்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பீல்டர்கள் விக்கெட்டுக்கு முன்னால் பேட்டருக்கு அருகில் இருக்கும்போதும் ஹெல்மெட் கட்டாயம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஃப்ரீ ஹிட்டில், பந்து ஸ்டெம்பில் பட்டாலும் ரன் எடுக்கலாம் என என்றுள்ளனர். இந்த மாற்றங்கள் ஜூன் 1 அன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் நடைமுறைக்கு வரும். ஜூன் 7ம் தேதி தொடங்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் இந்த புதிய விதிகளை பின்பற்றும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.
Three new changes announced to the Playing Conditions ahead of the #ENGvIRE Test and #WTC23 final ????https://t.co/N0PNSVGC5q
— ICC (@ICC) May 15, 2023