துலீப் ட்ராபி : சூரியகுமாருக்கு ஏற்பட்ட காயம்! நெருக்கடியில் ருதுராஜ் கெய்க்வாட்?
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் துலீப் ட்ராபி தொடர் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இந்த ஆண்டு நடத்தி வரும் தொடர் தான் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இதில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியின் போது தமிழக அணியிடம் மும்பை அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியின் போது மும்பை அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் வரவில்லை. மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்த போட்டியை மும்பை அணி தோற்றது. மேலும், இந்த போட்டி கடைசி வரை செல்லும் எனப் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது முசீர் கான் வீசிய பந்தைத் தமிழக வீரரான பிரதோஷ் ரஞ்சன் லெக் சைட் அடித்தார். அதை ஃபீல்டிங்கில் நின்ற சூரியகுமார் பிடிக்க முயன்ற போது பந்து அவரது கைவிரலில் பட்டு தூரம் சென்று விடும். இதனால் கைவிரலைப் பிடித்துக் கொண்டு அவர் வலியால் துடித்தார்.
மேலும், அதோடு அந்த போட்டியில் மேற்கொண்டு அவர் ஃபீல்டிங் செய்யாமல் களத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்திய அணிக்காகத் தொடர்ச்சியாக அவர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில் வரும் செப்டம்பர்-5 முதல் இந்திய அணி உள்ளூர் தொடரான துலீப் ட்ராபியில் விளையாடவுள்ளது. அதிலும், சூரியகுமார் யாதவ் இந்தியா-C அணிக்காக விளையாடவுள்ளார். அந்த அணியை இந்திய இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்குகிறார்.
தற்போது, சூரியகுமார் யாதவுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த காயம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவில்லை. இதனால், அணியில் இருக்கும் ஒரு நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால், இது ருதுராஜூக்கும் அந்த அணிக்கும் இது நெருக்கடியாக அமையலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.