துலீப் ட்ராபி : முதல் சுற்றுக்கான அணிகளை அறிவித்தது பிசிசிஐ!

Duleep Trophy Team Announcement

மும்பை : உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிவப்பு நிற பந்தை அடிப்படையாய் கொண்டு விளையாடும் துலீப் டிராபி தொடருக்கான அதிகாரப்பூர்வ 4 அணிகளை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

2024-25ம் ஆண்டிற்கான துலீப் டிராபி தொடரின் முதல் சுற்றுக்கான அணிகளைத் தேர்வுக் குழு இன்று (புதன்கிழமை) அறிவித்தது. உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் சிவப்பு பந்து வடிவத்தில் விளையாடும் ஒரு தொடர் தான் துலீப் டிராபி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் சிறந்த வீரர்கள் மற்றும் சில இளம் வீரர்கள் அதாவது வளர்ந்து வரும் வீரர்கள் என அனைத்து வீரர்களும் இந்த தொடரில் விளையாடுவார்கள்.

மேலும், இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மைதானம் மற்றும் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் இந்த தொடரின் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மாவும் மற்றும் விராட் கோலியும் அறிவிக்கப்பட்ட இந்த அணிகளில் எங்கும் இடம்பெறவில்லை.

இந்த இரண்டு வீரர்களும் துலீப் ட்ராபியின் 2-வது சுற்றில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த துலீப் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் வங்கதேச தொடருக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், B அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான நிதிஷ்குமார் ரெட்டி இந்த தொடரில் பங்கேற்பது உடற் தகுதிக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

முதல் சுற்றுக்கான நான்கு அணிகள் :

அணி A :  ஷுப்மான் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கே.எல்.ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ர, ஷாஸ்வத் ராவத்.

அணி B :  அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், சாய்.கிஷோர், மோஹித் அவஸ்தி , என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்).

அணி C :  ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பி.இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, மயங்க் மார்கண்டே (விக்கெட் கீப்பர்), சந்தீப் வாரியர்.

அணி D :  ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), சௌரப் குமார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்