நவராத்திரி துவக்கம்… உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மாற்றம்.?

இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் நடைபெற உள்ளது. சென்னை, அகமதாபாத், டெல்லி உட்பட 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறும் அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி விழா துவக்க விழா என்பதால் அன்றைய தேதியில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காரணத்தை கருத்தில் கொண்டு தேதியை மாற்ற கோரி பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதன் பெயரில் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு போட்டியை மாற்ற கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல, வேறு சில போட்டிகளும் மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போட்டி அட்டவணையை தயார் செய்தவர்களை முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறுகையில், இந்திய அணி ஒவ்வொரு போட்டி முடிந்தும் வேறு ஒரு இடத்திற்கு தொடர்ந்து அதிக தூரம் பயணித்து கொண்டே இருக்கும் படி யார் அட்டவணையை தயார் செய்தது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025