IPL2024: தொடர் மழையால் டாஸ் போடாமல் இன்றைய ஆட்டம் ரத்து..!
IPL2024: மழை காரணமாக கொல்கத்தா , குஜராத் அணி மோத இருந்த போட்டி டாஸ் போடாமல் கைவிடப்பட்டது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் , குஜராத் அணியும் மோத இருந்தனர். இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இருந்தது. இந்த போட்டி தொடங்கும் முன் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் மழை நின்ற பின் போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் போட்டி தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் போட்டி டாஸ் போடாமல் இன்றைய போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.