டக் அவுட் ஆன தொடக்க வீரர்கள்.. பரிதாப நிலையில் இந்தியா..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பையின் 5 -வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ரன்களும், வார்னர் 41 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டும் , குல்தீப் , பும்ரா தலா இரண்டு விக்கெட்டும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினர். 200ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர்.
முதல் ஓவரின் 4 பந்தில் இஷான் கிஷன் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் அடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க 2-வது ஓவரின் 3 பந்தில் ரோஹித்தும், கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர்.
இதனால் இந்திய அணி 2 ரன் எடுத்து 3 விக்கெட்டை கொடுத்தது. தற்போது இந்தியா 12 ரன் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் விராட் கோலியும் , கேஎல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். தற்போதைய இந்திய அணியின் நிலையை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஹேசில்வுட் 2 விக்கெட்டையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் பறித்தனர்.