ஆனது டக் அவுட்…அடிச்சது ரூ.1.93 கோடி! சம்பளத்தை அள்ளிய ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியும் ரூ.1.93 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார் அதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025 -ஆம் ஆண்டுகான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. எனவே, அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீதும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் போட்டி லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தான் மார்ச் 23 -ஆம் தேதி விளையாடியது.
இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனது பெரிய சோகமான விஷயமாக மாறியது என்று சொல்லலாம். ஏனென்றால், முதல் போட்டியில் இப்படி அவர் விளையாடுவார் என ரசிகர்கள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். அவர் டக் அவுட் ஆனவுடன் சமூக வலைத்தளங்களில் இவரை எதுக்கு ரூ.27 கோடிக்கு எடுத்தீங்க? என்கிற விமர்சனங்களும் எழுந்தது.
மேலும், இந்த போட்டியில் பண்ட் ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்றாலும், அவர் இந்த ஒரு போட்டிக்காக சுமார் ரூ.2 கோடி ரூபாய் வரை சம்பாதித்தார் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்றால் அவருடைய ஏலத் தொகையை அடிப்படையாகக் வைத்து தான். ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இதன் மூலம் ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலைபோன வீரர் என்கிற சாதனையையும் படைத்திருந்தார். எனவே, அதன் அடிப்படையில் பார்த்தால் அவருக்கு ஒரு போட்டிக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. ஐபிஎல் 2025 சீசனில் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். எனவே, இதனை வைத்து பார்த்தால் அவருக்கு ஒரு போட்டிக்கு சம்பளமாக 1.93 கோடி வழங்கப்படுகிறது. மொத்தமாக 14 போட்டிகளில் அவர் விளையாடினாள் மொத்தமாக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகை 27 கோடி சரியாகிவிடும். எனவே, அதனை வைத்து தான் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது .