அடுத்தடுத்து டக் அவுட் .., வெளியேறிய ராயுடு.., வேதனையில் சென்னை ரசிகர்கள் ..!
சென்னை அணி 3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளனர்.
இன்றைய போட்டியில் சென்னை மும்பை அணி மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆனால் முதல் ஓவரிலேயே டுப்ளெஸ்ஸி எடுக்காமல் விக்கெட்டை இழக்க , அடுத்து களமிறங்கிய மெயின் அலியும் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.
இதனால் சென்னை அணி இரண்டு ஓவரில் 2 விக்கெட் எடுத்து இரண்டு ரன்கள் எடுத்தன. இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு ஆடம் மில்ன் வீசிய அதிவேக பந்து அம்பத்தி ராயுடு இடது முழங்கையில் பட்டதால் களத்திலிருந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரெய்னா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி விளாசி விக்கெட்டை இழந்தார்.
இதனால் சென்னை அணி 3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளனர். தற்போது களத்தில் தோனி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் விளையாடி வருகின்றனர்.