IPL 2024 : விராட் கோலியின் பேட்டிங் குறித்து RCB கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பாராட்டி உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், முதல் பந்தில் 6 ரன்களும், அடுத்த பந்தில் 4 ரன்களை அடித்து வெற்றி தேடித் தந்தார்.
இதன் மூலம், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று பெங்களூர் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
போட்டி முடிந்த பின், பெங்களூர் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் வெற்றி பெற்ற தருணத்தை பகிர்ந்து கொண்டார். கோலியின் மேட்ச்-வின்னிங் நாக் மற்றும் களத்தில் அவரது உணர்ச்சிமிக்க விளையாட்டை பாராட்டினார்.
“இன்று விளையாடிய பிட்ச்சானது சற்று சவாலாக இருந்தது, அது வழக்கம் போல பேட்டிங் பிட்சாக இல்லை . அதிலும், விராட் தனது விளையாட்டை மேலும் மேம்படுத்தி உள்ளார். அவர் விளையாடுவதை பார்க்க நன்றாக இருக்கிறது. அவர், இது போன்ற சாவல்கள் நிறைந்த கிரிக்கெட் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்” என கூறினார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…