நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இலங்கை , தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது . இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.பிறகு இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான குயின்டன் டி கோக் , ஹாஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.தொடக்கத்திலே குயின்டன் டி கோக் 15 ரன்னில் வெளியேற பிறகு தென்னாப்பிரிக்கா கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார்.
ஹாஷிம் அம்லா , டு பிளெஸ்ஸிஸ் இவர்களின் இருவரின் கூட்டணியில் அதிரடி காட்டினார். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது.இப்போட்டியில் டு பிளெஸ்ஸிஸ் 103 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.அதில் 10 பவுண்டரி ,ஒரு சிக்ஸர் விளாசினார்.
மேலும் டு பிளெஸ்ஸிஸ் இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இறுதிவரை நின்றார். இந்நிலையில் உலகக்கோப்பையில் 90 ரன்னிற்கு மேல் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன்களில் பட்டியலில் டு பிளெஸ்ஸிஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
ஆர் ரிச்சர்ட்சன் – 93 * (1996)
எம்.எஸ் தோனி – 91 * (2011)
டு பிளெஸ்ஸிஸ் – 96 * (2019) *
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…