” டிஆர்எஸ் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் ” – பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை ..!

இந்தியா, இங்கிலாந்து அணியிடயே நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்ஸில் 557 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேற்றம்

அந்த இன்னிங்ஸில் டி.ஆர்.எஸ் விதிகளும் கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு கைகொடுக்காமல் போனது. அதன்பின்  போட்டி முடிந்த பிற்பாடு பென் ஸ்டோக்ஸ் இது குறித்து கூறுகையில், ” டி.ஆர்.எஸ் விதிகளை சற்று மாற்றம் செய்ய வேண்டும். ஏனென்றால், LBW விக்கெட்டிருக்கு டி.ஆர்.எஸ் கிராபிக்ஸில் பந்து ஸ்டம்பில் அடிப்பது போல இருந்தால் அதற்கு அவுட் கொடுக்கப்படுகிறது.

அதே போல் பந்து ஸ்டம்பில் சிறியதாக பட்டிருந்தால் கூட அதற்கு அவுட் வழங்கக்கூடாது. ஆனால் இந்த கூழ்நிலையில் கள நடுவர்கள் அவுட் கொடுத்திருந்தால் அது அவுட் ஆகவும், அவுட் கொடுக்கவில்லை என்றால் அவுட் இல்லை எனவும் வழங்கப்படுகிறது. அப்படி கள நடுவர்களின் முடிவே (Umpires Call) இறுதியானது என்றால் எதற்காக இந்த டி.ஆர்.எஸ் முறை.

நான் இதை குறை சொல்லவில்லை. இதில் சிறிய மாற்றங்களை கொண்டு வரலாம். இதை குறித்து  நான் அதிகமாக பேசினால், இதனால் தான் நாங்கள் 3-வது டெஸ்ட் போட்டியில் தோற்றோம் என்பது போல ஆகிவிட கூடாது. இந்த டி.ஆர்.எஸ் முறையில் சிறிய மாற்றங்களை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பென் ஸ்டோக்ஸ் கூறி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்