இந்திய அணியின் புதிய முன்னணி ஸ்பான்சராக ட்ரீம்11-ஐ பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சராக பேன்டஸி ஸ்போர்ட்ஸ் கேமிங் தளமான ட்ரீம்11 (Dream 11) உடன் மூன்று வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, 2023ம் ஆண்டிலிருந்து 25ம் ஆண்டு வரையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தே இந்திய அணியின் ஜெர்சியில் ட்ரீம்11 லோகோவுடன் விளையாடும். இதில் முதல் போட்டி ஜூலை 12ம் தேதி டொமினிகாவின் வின்ட்சர் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, நான் ட்ரீம்11-ஐ வாழ்த்தி வரவேற்கிறேன். பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருந்து இப்போது முன்னணி ஸ்பான்சராக ட்ரீம்11 வளர்ந்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி உலகக் கோப்பையை நடத்த நாங்கள் தயாராகி வரும் நிலையில், ரசிகர்களின் ஆர்வத்தை உயர்த்த இந்த ஒப்பந்தம் உதவும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் கூறுகையில், பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் நீண்டகால கூட்டாளியாக, ட்ரீம்11 எங்கள் ஒற்றுமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ட்ரீம்11 இல், கிரிக்கெட் மீதான எங்கள் அன்பை ஒரு பில்லியன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் தேசிய அணிக்கு முன்னணி ஸ்பான்சராக மாறுவது பெருமை மற்றும் எங்கள் பாக்கியம் என்று கூறியுள்ளார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…